Credits
PERFORMING ARTISTS
K. J. Yesudas
Vocals
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Kannadasan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ilaiyaraaja
Producer
Lyrics
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி-மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைகாற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன்-மறவேன் அற்புத காட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
Written by: Ilaiyaraaja, Kannadasan