Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Mahathi
Performer
Rahul Raveendran
Performer
Abirami Audio
Performer
COMPOSITION & LYRICS
S.P.Devarajan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Abirami Audio Recording Private Limited
Producer
Lyrics
எழுக எழுக ஸ்ரீ பாண்டுரங்கனே
எழுக எழுக ஸ்ரீபாண்டுரங்கனே
எழுந்தே உன் கோலம் காட்டு
எழும்பி வருகின்ற கதிரொளியாலே
இருளெனும் துயிலோட்டு
ஸந்து ஸாது முனிபுங்கவரெல்லாம்
சந்நதி கூடி நின்றார்
ஸாயி நாதா குருவே எழுவீர்
என்றவர் பாடுகின்றார்
ரங்கமண்டபம் மசூதியெல்லாம்
அடியார் திருக்கூட்டம்
ராதையே ருக்மணி தேவி எழுப்பிட
உமது தயவை காட்டும்
கருடனுடன் ஸ்ரீ அனுமான் சேர்ந்து
கைகளை கூப்பி நின்றார்
கானங்கள் இசைக்க அமரர்கள் எல்லாம்
ஆலய வாசல் நின்றார்
கதவின் தாளினை திறந்து வந்தே
கண்ணால் அருள் வழங்கும்
காலை வேளையில் செய்வோமிந்த
ஆரத்தி ஏற்றுக் கொள்ளும்
இதந்தரும் வைகறை வேளைதனில்
இன்முகங்காட்டி செல்லும்
பதமலர் இரண்டில் பணிவோம் தேவா
பாபா சரணமய்யா
Written by: S.P.Devarajan


