Créditos

PERFORMING ARTISTS
Haricharan
Haricharan
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
Madhan Karky
Madhan Karky
Songwriter
Nivas K Prasanna
Nivas K Prasanna
Composer

Letras

வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே
உயிரே... உயிரே விழியோ நிஜமே
அழகே... அழகே இமைதான் கனவே
திறவாயடி... ஈ... திறவாயடி... ஈ...
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே ஹே... ஹே... ஹே...
இருளிலே புதைகிறாய்
ஒளியென வருகிறேன்
ஒலியிலே தொலைகிறாய்
அமைதியை தருகிறேன்
எதனால் விழியில் மயக்கம்
எதனால் மனதில் தயக்கம்
உறவே உறவே சிறகோ நிஜமே
இணையே இணையே வானோ கனவே
பறவாயடி... ஈ... பறவாயடி... ஈ...
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே... ஏ... ஏ... ஏ... ஏ ஹே...
Written by: Madhan Karky, Nivas K Prasanna
instagramSharePathic_arrow_out

Loading...