Crédits
INTERPRÉTATION
ChuChuTV Tamil
Interprète
ChuChu TV
Voix principales
COMPOSITION ET PAROLES
ChuChu TV
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
ChuChu TV Studios LLP
Production
Paroles
வந்தது வந்தது புத்தாண்டு
தமிழர்கள் போற்றும் புத்தாண்டு
அருளும் வளமும் கைக்கொண்டு
வந்ததே தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம் முதலாம் நாளாம் - அது
தமிழரின் வாழ்வில் திருநாளாம்
மகிழ்ச்சி பொங்கும் ஒரு நாளாம் - அது
மங்களம் தரும் திருநாளாம்
ஏய் வந்தது வந்தது புத்தாண்டு
தமிழர்கள் போற்றும் புத்தாண்டு
கோடை மாதத்தில் வந்துவிடும்
குதுகுலமான பண்டிகையாம்
புத்தாடை அணிந்து குழந்தைகளும்
கொண்டாடும் இன்ப பண்டிகையாம்
வீதியெங்கும் தோரணம் கட்டிடுவோம் - நம்
வீட்டையும் சுத்தம் செய்திடுவோம்
புதிய புத்தாண்டை வரவேற்று
தமிழ் பாடல் ஒன்று பாடிடுவோம்
வந்தது வந்தது புத்தாண்டு
தமிழர்கள் போற்றும் புத்தாண்டு
அருளும் வளமும் கைக்கொண்டு
வந்ததே தமிழ் புத்தாண்டு
சின்ன குழந்தை நாமெல்லாம்
தமிழுக்கு சிறப்பு செய்திடலாம்
நன்றாய் தமிழை கற்றிடுவோம் - நல்ல
தமிழில் நன்றாய் பேசிடுவோம்
சூரியன் போலே ஒளிர்திடுவோம் - இங்கு
எல்லோர்க்கும் உதவி செய்திடுவோம்
வாழ்த்துக்கள் கூறி கொண்டாடுவோம் - என்றும்
அன்பாய் நாமும் இணைந்திடுவோம்
வந்தது வந்தது புத்தாண்டு
தமிழர்கள் போற்றும் புத்தாண்டு
அருளும் வளமும் கைக்கொண்டு
வந்ததே தமிழ் புத்தாண்டு
இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க
இன்பமாய் மலரும் புத்தாண்டு
பழயன கழித்து புதியன புகுத்தி
பூவாய் புலரும் புத்தாண்டு
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Written by: ChuChu TV