Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Jakes Bejoy
Interprète
Akhil J. Chand
Interprète
Gayathry Rajiv
Interprète
Mohan Rajan
Interprète
Tovino Thomas
Interprétation
Suraj Venjaramoodu
Interprétation
Cheran
Interprétation
Rini Udayakumar
Interprétation
COMPOSITION ET PAROLES
Jakes Bejoy
Composition
Mohan Rajan
Paroles
Paroles
கண்ணோடு கண்களை கண்டநொடி, ஆயிரம் பேரலை வீசிடுதே
இன்னமும்-இன்னமும் பார்க்கச்சொல்லி, நெஞ்சமும் கெஞ்சிடுதே
பார்வையில் கண்டிக்கும் வாசக்காரி, பாசத்தில் தண்டிக்கும் மாயக்காரி
உன்னோடு கைகோர்த்து நான் நடக்க, ஆவல் கூடுதே
உள்ள ஒளிஞ்ச என் காதலெல்லாம்
கள்ளத்தனமென தென்படுதே
இந்த நொடி இப்படியே நின்றிட ஆசையடி
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
கூந்தல்முடி தொட்டு உரசும், தூரத்தில் உன்விரல் பற்றி
அந்தி பகல் வாழும் யோகம் கேட்கிறேன் நானே
ராவில் உந்தன் பூவிழி துஞ்ச, தூக்கம்விட்டு உன்னை நான் கொஞ்ச
என்னோட இதயமும் ஏங்குதடி
நீயென்றால் என்னுள்ளே ஏதேதோ
என் நாவில் உன் பேச்சு தீராதோ
ஓவியம் போல் சேரலாம்
காவியம் போல் வாழலாம்
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
முத்தங்களை அடுக்கி வைத்து, நேசத்தில் உன்னிடம் தோற்று
உன் செல்லம் நான்யென வாழ்ந்திருப்பேன்
என்னிடம் சண்டைகள் போடும், காதலதை எப்பவும் கேட்டு
உன் எதிரில் நிழலென வீழ்ந்திருப்பேன்
நீ இங்கே நான் இங்கே நாமானோம்
அன்பான அன்பாலே கைதானோம்
சேர்ந்திருப்போம் சுவாசமாய்
நிஜங்களை சேகரிப்போம் ஆழமாய்
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
மின்னலென வந்து நின்ற பெண்ணழகே
மின்மினியாய் மின்னுகின்றேன் உனது அருகிலே
Written by: Jakes Bejoy, Mohan Rajan

