Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
G. V. Prakash Kumar
Chant
Roop Kumar Rathod
Chant
Harini
Chant
Andrea Jeremiah
Chant
Na. Muthukumar
Interprète
Amy Jackson
Interprétation
Vijay
Direction d’orchestre
Aarya
Interprétation
COMPOSITION ET PAROLES
G. V. Prakash Kumar
Composition
Na. Muthukumar
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Kalpathi. S. Aghoram
Production
Paroles
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
உலரும் காலைபொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே, இது எதுவோ?
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே, பூந்தளிரே
வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி, விதையின்றி, வின்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்?
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும், பூந்தளிரே
Oh, where would I be?
Without this joy inside of me
It makes me want to come alive
It makes me want to fly, into the sky
Oh, where would I be?
If I didn't have you next to me
Oh, where would I be?
Oh, where?, oh, where?
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, இது எதுவோ?
பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே, பார்ததாரும் இல்லையே
உலரும் காலைபொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே, என்ன புதுமை?
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே, இது எதுவோ?
Written by: G. V. Prakash Kumar, Na. Muthukumar

