म्यूज़िक वीडियो

म्यूज़िक वीडियो

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Palani Bharathi
Palani Bharathi
Songwriter

गाने

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே
நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது
கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது
இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே
காணாத கண்ணீரு கண்ணுக்குள்ள நின்னாலும்
தேனாக நீ என்னை மடியில் ஏந்தி கொண்டாயே
நீரோடு சேறாக நான் கலங்கி வந்தாலும்
தோழாட மார்போட தாங்கி கொண்ட என் தாயே
அம்மா உன் கருணை தானே மேகமாக மாறுது
உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது
உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது?
இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே
என்னென்ன ஆனாலும் சோகம் எல்லாம் உன்னோட
முன்னாலும் பின்னாலும் யாருமில்லை என்னோட
எங்க எங்க போனாலும் வானம் தானே கூட வரும்
இன்ப துன்ப சூழலிலும் உன் மனசு பின்ன வரும்
தாயிகுள்ள ஈசன் உண்டு பிள்ளை மட்டும் தான் அறியும்
ஈசனுக்கு தாயிருந்தால் அன்னை நெஞ்சம் தான் அறியும்
உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது?
இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே
நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது
கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது
இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே...
Written by: Ilaiyaraaja, Ilaiyaraja Official, Palani Bharathi
instagramSharePathic_arrow_out

Loading...