Dari
PERFORMING ARTISTS
P. Unnikrishnan
Performer
S.P. Balasubrahmanyam
Lead Vocals
Deva
Performer
Vijay
Actor
Kausalya
Actor
COMPOSITION & LYRICS
Ravishankar
Songwriter
Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Lakshmi Movie Makers
Producer
Lirik
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
அய்யய்யோ, தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா, சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
ஹே, கல்லைத்தான் தட்டத் தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்டத் தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பெயரை கேட்டு வந்தால்
என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரை கேட்டு வந்தால்
என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நீ நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டை போட்டு மனதை வைத்தேனே
காட்டுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா?
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா?
நான் பறவையாகும்போது
உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது
உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
Written by: Deva, Ravishankar

