Dari
PERFORMING ARTISTS
Nithya Sree
Vocals
Vairamuthu
Performer
A.R. Rahman
Lead Vocals
Aishwarya Rai Bachchan
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Javed Akhtar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
A.R. Rahman
Producer
H. Sridhar
Engineer
S. Sivakumar
Engineer
Lirik
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை, கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை, நீ என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ, தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தால் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ, இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை, கண்களுக்குச் சொந்தமில்லை
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே, விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ, அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித்தனியே தேடுகின்றோம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை, கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை, நீ என்னைவிட்டு பிரிவதில்லை
Written by: A. R. Rahman, Vairamuthu, Vairamuthu Ramasamy Thevar