Crediti
PERFORMING ARTISTS
Shankar Mahadevan
Performer
Dhanush
Actor
COMPOSITION & LYRICS
Palani Bharathi
Songwriter
Testi
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே சாபம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்
உன் பாத சுவடுக்குள்
சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறைக்காதே...
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே
Written by: N Muthu Kumaran, Palani Bharathi, Yuvan Shankar Raja