クレジット

PERFORMING ARTISTS
Gold Devaraj
Gold Devaraj
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Actor
COMPOSITION & LYRICS
Ghibran
Ghibran
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

歌詞

அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
என் தராதாரம் காங்காமலே
அடாவடி பண்ணாதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்
இத்துணுண்டு பச்சையில
காஞ்சு போன தரிசிருக்கு
அத்துவான காட்டுக்குள்ள
ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி
அதுக்குள்ள உசுரிருக்கு
கம்மாயே காஞ்சாலும்
கருவேலம் பூ பூக்கும்
எம்மா நீ போனாலே
உசுர் பூக்குமா
முந்தான எனக்காக
முழு வேட்டி உனக்காக
பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு
கழுத்த காட்டு
அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம பாக்கட்டுமா
என் தராதாரம் காங்காமலே
அடாவடி பண்ணாதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
என்னை விட்டு நீ கடந்தா
உன்னைவிட்டு நான் பிரிஞ்சா
மண்ணை விட்டு மறஞ்சிருப்பேன்
மீன் செத்து மெதக்குற
குளத்துல நதியில
நான் செத்து மிதந்திருப்பேன்
என்னனென்ன ஆனாலும்
என்னாவி போனாலும்
உன் நெஞ்சில் உக்காந்து
உசிர் வாழ்வேன்
உன் வீட்டு கூரையில
ஒழுகும் நீர் நானாவேன்
ஒத்தைத் துளி பார்வை பார் கண்ணு
ஓரம் நின்னு
அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேக்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
என் தராதாரம் காங்காமலே
அடாவடி பண்ணாதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
கைவிட்டு போனாக் கூட காதல் தீராது
கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது
Written by: Ghibran, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...