クレジット
COMPOSITION & LYRICS
Kaber Vasuki
Songwriter
歌詞
நெஞ்சமே சுத்தி பாரு
சரித்திரம் மாபெரும் சுடுகாடு
வீரமே சொன்னால் கேளு
தப்பிதவன் ஒப்பிப்பதே வரலாறு
வாழ்பவன் வெல்கிறான்
வென்றவன் கதை சொல்கிறான்
கடந்து வந்தேன்
குருதி ஆறின் மீது கற்பனை பாலம்
சுத்தி பார்த்தால்
சுத்தி பார்த்தால்
நவீன காலம்...
நவீன காலம்...
நவீன காலம் என் போர்க்களம்
நான் பிறந்ததோ பல ஆயிரம்
ஆயிரம் வருடங்கள் முன்னே
என் கதை கேளடி
எல்லையற்றது என் ரௌத்திரம்
இக்கட்ட காலக்கட்டத்திலும்
எட்டுத்திக்கும்
துள்ளி பாயும்
எங்கும் எதற்கும்
நிற்காதே
I'm gonna make some hard
I'm gonna make some hard
முடியாதென்று மனதுக்குள் நினைத்திருந்தால்
நம்மால் முடிந்திடுமா?
யுத்தம் அது துவங்கிவிட்டால்
கருணைக்கு வழி இருக்கா?
எவன் அதை இங்கு தொடங்கி வைத்தான்
அமைதியாய் நாம் உறங்குவதால்
அனைத்துமே கிடைத்திடுமா?
வழிகளும் திறந்திடுமா?
உதிரட்டும் இனி
உதிரமும் உதிரத்தின் வழி
ஒளி பிறக்கட்டும்
சுட்டு எரித்திடும் ஒளி
உந்தன் கரங்களில்
நீ சுமந்திடும்
வாளின் வழி
தன்னை உயர்ந்தவன் என நினைத்தவர்
தலை உருளட்டும்
தலை உருளட்டும்
தலை உருளட்டும்
உயரம் முதல்
தரைக்கவர்
தலை
உருளட்டும்
வியர்வையின்
துளி வெல்லட்டும் இனி
வெறும் கனவுகள் மட்டும் அடங்கிய எந்தன்
மனதிற்கு மாபெரும்
மாபெரும் சூழ்ச்சிகள் புதிதல்ல
இறந்திடும் மனிதர்கள் புதிதல்ல
வாய் பேசிடும் வார்த்தை போராளி
அவர் செய்யும் செயல்கள் புதிதல்ல
போரிலே சவங்கள் புதிதல்ல
பலரிடம் பல வழிமுறை திருடி
ஆணவ நடனம் ஆடும்
அந்த கூட்டத்தை நான் புதைத்திடும் நாட்கள்
தொலைவல்ல
நவீன காலம் என் போர்க்களம்
நான் பிறந்ததோ பல ஆயிரம்
ஆயிரம் வருடங்கள் முன்னே
என் கதை கேளடி
எல்லையற்றது என் ரௌத்திரம்
இக்கட்ட காலக்கட்டத்திலும்
எட்டுத்திக்கும்
துள்ளி பாயும்
எங்கும் எதற்கும்
நிற்காதே
Written by: Kaber Vasuki

