ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Hariharan
Vocals
Mahalakshmi Iyer
Vocals
COMPOSITION & LYRICS
Vairamuthu
Lyrics
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
Producer
歌詞
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது
என் கை சேருமோ
கை சேராமலே
கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே
உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
விரல் தொடும் தூரத்திலே
ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
Written by: A. R. Rahman, Vairamuthu


