ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Shruthika Samudhrala
Performer
Kamal Haasan
Actor
Siddharth
Actor
SJ Suryah
Actor
Kajal Agarwal
Actor
Rakul Preet Singh
Actor
Priya Bhavani Shankar
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Pa Vijay
Lyrics
歌詞
பார்ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
வேறா வரிப்புலி வரலாறா
திணவுள்ள தோள்கள் உண்டு தீயை கக்கும் வாட்கள் உண்டு
புறவிக்கு ரெக்கை உண்டு புயலுக்கும் தான் உருவம் உண்டு
தொட்டுப் பார் கை நடுங்கும் மூச்சடங்கும் இவனை கண்டு
வேட்டைக்கு போகுது பார் வேங்கை வெறி கொண்டு
என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு இனி வாளில் ஏற்று சாணை
பார்ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
வேறா வரிப்புலி வரலாறா
கன்னங்கரு இரவு போதாதா நமக்கு
வெள்ளக்கார நிலா வான் மீது எதுக்கு?
ரத்தக் கறை படிஞ்ச உன் வாலின் முனைக்கு
முத்தக் கறை ஒன்னு வேணாமா துணைக்கு
உன்னோட காலடி குலம்பாகனும்
உன் மேல விழும்பூண் தழும்பாகும்
உன் கையில் சேரும் வரமாகணும்
இல்லை தாய் மண்ணுக்கே நாம் உரமாகணும்
அடியே வெடியே அல்லி கொடியின் மடியே
உன்ன அள்ளி வாசம் பாக்க வறட்டா?
புரியா வலியே சேலை புலியே புலியே
உன் மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா?
துப்பாக்கி தாப்பாய் கொண்ட சிப்பாய்க்கெல்லாம் சிம்மம் நீயே
நட்ப்பாக்கி நேசம் காட்டும் குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே
அடிமைகள் ரத்தத்துக்கு வெப்பம் தந்த வீரத் தீயே
அதிகார வர்க்கத்துக்கு அறைக்கூவல் நீயே
என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு இனி வாளில் ஏற்று சாணை
பார்ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
வேறா வரிப்புலி வரலாறா
Written by: Anirudh Ravichander, Balakrishnan Vijay, Pa Vijay