ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Vijay Prakash
Performer
Karthik
Performer
Shreya Ghoshal
Performer
Shekhinah Shawn Jazeel
Performer
Viveka
Performer
Kajal Aggarwal
Actor
Suriya
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Viveka
Lyrics
歌詞
[Chorus]
யே நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
யேகோவா நானி கோனிராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன் யேகோவா
[Chorus]
நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய்
நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[Chorus]
ஆ நானி கோனி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த கானி என்னை தா நீ என்று கேட்கிறாய்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
[Chorus]
நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய்
நான் உன்னால் ஆனேன் வேராய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[Verse 1]
ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
[Verse 2]
நதியிலே
இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரே
நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே, உயிரே உயிர் போக போக தொடரும்
[Chorus]
நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன்
ஓ நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
[Verse 3]
தொலைதூரம் போனதே என் மேகம்
புரியாத மென்சோகம்
முகிற் மேலே ஊசி இறக்கும்
ஹோ பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகை
வெளிக்காட்டும் சாரலில்
எனைப்போல சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
நெஞ்சினிலே
புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
இதயம், இதயம் சுகமாக இருக்கும் இனி
[Chorus]
நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று ஏலாஹா
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன் ஏலாஹாஹா
[Chorus]
நீராய் நீராய்
ம்ம்ம் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய்
நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
Written by: Harris Jayaraj, Viveka

