ミュージックビデオ

ミュージックビデオ

歌詞

காற்றில் ஓர் வார்த்தை
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி
கவிதை செய்துகொண்டேன்
ஹே-ஹே साहिबा, ஹே-ஹே साहिबा
ஹே-ஹே साहिबा, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
ஹே-ஹே साहिबा, ஹே-ஹே साहिबा
ஹே-ஹே साहिबा
காற்றில் ஓர் வார்த்தை
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி
கவிதை செய்துகொண்டேன்
கண்களை தொலைத்துவிட்டு
கைகளால் துழாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை
இன்றுதான் அறிந்துகொண்டேன்
உன் கண்ணில்தான் கண்விழிப்பேன்
ஹே-ஹே साहिबा, ஹே-ஹே साहिबा
ஹே-ஹே साहिबा, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
காற்றில் ஓர் வார்த்தை
மிதந்து வர கண்டேன்
ஸ்நேகிதி
ஆ ஹா
ஸ்நேகிதி
ஆ, ஆ, ஆ...
சுற்றி என்னை துரத்தும் துயரமடி
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி
மருந்துகள் இல்லா தேசத்தில்கூட
மைவிழி பார்வைகள் போதும்
கவிதைகள் இல்லா மொழிகளில்கூட
காதலன் புன்னகை போதும்
உலகங்கள் ஏழும்
பனி மூடும் போதும்
உன் மார்பின் வெப்பம் போதும்
ஹே-ஹே சிநேகிதா, ஹே-ஹே சிநேகிதா
ஹே-ஹே சிநேகிதா, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
காற்றில் ஓர் வார்த்தை
மிதந்து வர கண்டேன்
விதைகளை கிழித்து செடி முளைக்கும்
அன்பே, விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்
சதைகொண்ட மயக்கம் கழிந்தபின்னே
உன் சத்தியத்தின் நிழலில் குடியிருப்பேன்
காதலி உதறிய தாவணி பறந்து
வானவில் ஆனதென்ன?
காதலன் சிதறிய பேனா மையில்
வானம் தோன்றியதென்ன?
நூற்றாண்டாய் நீளும்
முத்தங்கள் வேண்டும்
வா கண்ணே வாங்கி கொள்ளேன்
ஹே-ஹே साहिबा, ஹே-ஹே साहिबा
ஹே-ஹே साहिबा, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
காற்றில் ஓர் வார்த்தை
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி
கவிதை செய்துகொண்டேன்
கண்களை தொலைத்துவிட்டு
கைகளால் துழாவி வந்தேன்
ஆ மண்ணிலே கிடந்த கண்ணை
இன்றுதான் அறிந்துகொண்டேன்
உன் கண்ணில்தான் கண்விழிப்பேன்
ஹே-ஹே சிநேகிதா, ஹே-ஹே சிநேகிதா
ஹே-ஹே சிநேகிதா, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
ஹே-ஹே சிநேகிதா, ஹே-ஹே சிநேகிதா
ஹே-ஹே சிநேகிதா, ஹே-எஹ், ஹே-எஹ்-ஹே-எஹ்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...