クレジット
PERFORMING ARTISTS
Sriram
Vocals
Kabilan
Performer
Vijayakanth
Actor
COMPOSITION & LYRICS
Kabilan
Songwriter
歌詞
வராரு வராரு வராரு வராரு
வராரு வராரு வந்திட்டாரு
கஜா வரான்டா கஜா வரான்டா
கண்கள் ரெண்டு தீ பறக்க
கஜா வரான்டா
கஜா வரான்டா கஜா வரான்டா
கண்கள் ரெண்டு தீ பறக்க
கஜா வரான்டா
ரெண்டு காலு சிங்கம் போல
நடந்து வந்தவனோ
வேட்பு மனு போடாமலே வெற்றி கண்டவனோ
எட்டு திசை எல்லாம்
கொடிகட்டி பறப்பான்
கொட்டும் மழை நீரில்
ஒரு தீயாய் எறிவான்
எங்கள் விழி காக்க
இரு இளமையாய் இருப்பான்
உச்சம் தலைமீது தமிழ் உலகை சுமப்பான்
கஜா வரான்டா கஜா வரான்டா
கண்கள் ரெண்டு தீ பறக்க
கஜா வரான்டா
வெண் நிலவை இவன் தோள் உரித்து
அதில் வேட்டி சட்டை அணிந்தவனோ?
மாநில மக்களை வாழ வைக்க
ஒரு மதுரை மண்ணில் பிறந்தவனோ?
ஒற்றை கையில் நூறு விரல் கொண்டனோ இவனோ?
பார்வையிலே பாறைகளை
பற்ற வைப்பான் இவனோ?
ஒற்றை கையில் நூறு விரல் கொண்டனோ இவனோ?
பார்வையிலே பாறைகளை
பற்ற வைப்பான் இவனோ?
வன்முறை அழிப்பது தான்
தன் முறையாய் கெண்டவன்
இமயம் குமரி வரை
இந்தியனாய் நின்றவன்
நம்பி வருவோரை இவன்
நம்பி இருப்பான்
வம்பு செய்வோரை
அவன் வேரை அறுப்பான்
சாதி மதமெல்லாம்
இவன் கடந்து நிற்பான்
வீடு என் வீடு தமிழ்நாடு என்பான்
கஜா வரான்டா கஜா வரான்டா
கண்கள் ரெண்டு தீ பறக்க
கஜா வரான்டா
வாடிய மனிதனின் கோரிக்கையை
இவன் வாழ்க்கை நாளை மீட்டுத்தரும்
கையை அசைத்தால் உனக்கு பின்னால் கடல் அலை போல
கூட்டம் வரும்
உள்ளதெல்லாம் அள்ளித்தர
வள்ளல் இவன்தான்
உச்சி முதல் பாதம் வரை
உன்னை போல யாரோ?
உள்ளதெல்லாம் அள்ளித்தர
வள்ளல் இவன்தான்
உச்சி முதல் பாதம் வரை
உன்னை போல யாரோ?
இமயத்தை மீசையால் கயிறுகட்டி இருப்பவன்
கூரை வீடுகளில் கூடுகட்டி வசிப்பவர்
பொய்யை எரிக்கின்ற
இவன் வெய்யில் மனிதன்
நம் கண்ணின் மணி ஆனான்
இந்த கருப்பு தமிழன்
பொய்யை எரிக்கின்ற
இவன் வெயில் மனிதன்
நம் கண்ணின் மணி ஆனான்
இந்த கருப்பு தமிழன்
கஜா வரான்டா கஜா வரான்டா
கண்கள் ரெண்டு தீ பறக்க
கஜா வரான்டா
ரெண்டு காலு சிங்கம் போல
நடந்து வந்தவனோ
வேட்பு மனு போடாமலே வெற்றி கண்டவனோ
எட்டு திசை எல்லாம்
கொடிகட்டி பறப்பான்
கொட்டும் மழை நீரில்
ஒரு தீயாய் எறிவான்
எங்கள் விழி காக்க
இரு இளமையாய் இருப்பான்
உச்சம் தலைமீது தமிழ் உலகை சுமப்பான்
Written by: Kabilan