크레딧
실연 아티스트
Yuvan Shankar Raja
실연자
Karthik Netha
실연자
Ranjith Govind
실연자
Shweta Mohan
실연자
작곡 및 작사
Yuvan Shankar Raja
작곡가
Karthik Netha
작사가 겸 작곡가
가사
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்
தாலாட்ட காதல் வந்தால் காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
மெளனத்தை மெளனம் சென்று ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்
எது ஆனால் என்ன
உன்னை விட்டு தர மாட்டேன்
சிறு கண்ணில் வைத்து கண்ணில் வைத்து
காத்து கிடப்பேன்
அட காலம் வந்து
உனை காயம் செய்யும் போது
என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன்
வயதானால் கூட உன்னை விட்டு
தள்ளி செல்ல மாட்டேன்
கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்
பலநூறு கதை பேச எண்ணி
அன்பு முகம் ஏந்தி
காதோரம் மூச்சில்
காதல் உரைப்பேன்
பெண்ணே பெண்ணே பெண்ணே
பேரன்பின் தூதே
நீ என்னும் தூரம் வரை நானும் நடப்பேன்
அன்பே அன்பே அன்பே
நீ உள்ள வாழ்வில்
தோற்றாலும் மீண்டும் மீண்டும்
நானே ஜெயிப்பேன்
தாலாட்ட காதல் வந்தால் காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்
Written by: Karthik Netha, Karthik Prasanna Rathinam, Yuvan Shankar Raja

