크레딧
실연 아티스트
Devi Sri Prasad
실연자
Vairamuthu
실연자
K.S. Chithra
보컬
Raqueeb Alam
보컬
Kalpana
보컬
작곡 및 작사
Devi Sri Prasad
작곡가
Vairamuthu
작사가 겸 작곡가
가사
சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
நட்ட தோட்டம் வாடிபோச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் வெட்டி கும்மிகொட்டி கொட்டு மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட்ட தரிகிட்ட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
கொள்ளை மழையே கொட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக
குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட்ட தரிகிட்ட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவாகி முனு முனு செய்தாயே
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட்ட தரிகிட்ட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
Written by: Devi Sri Prasad, Vairamuthu

