뮤직 비디오

뮤직 비디오

크레딧

실연 아티스트
Vidyasagar
Vidyasagar
실연자
Madhu Balakrishnan
Madhu Balakrishnan
실연자
Radha Mohan
Radha Mohan
지휘자
Prakash Raj
Prakash Raj
배우
Ganesh Venkatraman
Ganesh Venkatraman
배우
Trisha Krishnan
Trisha Krishnan
배우
작곡 및 작사
Vidyasagar
Vidyasagar
작곡가
Vairamuthu
Vairamuthu
가사
프로덕션 및 엔지니어링
Prakash Raj
Prakash Raj
프로듀서

가사

வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா?
மார்புதைக்கும் கால்களுக்கு
மணிக் கொலுசு நான் இடவா?
வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகை போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல
ஒரு முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்தபோது
என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்தபோது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக்கொண்டேன்
வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா-வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா?
மார்புதைக்கும் கால்களுக்கு
மணிக் கொலுசு நான் இடவா?
Written by: Vairamuthu, Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...