크레딧
실연 아티스트
Hariharan
실연자
Viba Sharma
실연자
작곡 및 작사
Palani Barathi
작사가 겸 작곡가
RAAJA KARTHIK
작가
가사
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலை அணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
நிலவே என்னை கொண்டாடு
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்
மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊரும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட
வார்த்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல் தான்
ஆனந்தம்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்
Written by: Palani Barathi, RAAJA KARTHIK

