크레딧
실연 아티스트
Bombay Saradha
실연자
작곡 및 작사
B.Rajinikanth
작곡가
M. R. Vijaya
가사
프로덕션 및 엔지니어링
K-Mi
프로듀서
가사
ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஷ்வாிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயகவாரணமே
கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் பயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமாி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
முத்தே வரும்முத் தொழிலாற் றிடேவ
முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறியநான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேரு ததிக் கிணைவாழ்வுடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம்பவளம் பொழி பாேரார்
தேம் பொழிலாமிது செய்தவர் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுத்தாள்
மந்திர வேத மயப்பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாப் கலையானவளே
பூணக் கிடையாப் புவியானவளே
புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும்நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ச்ருதி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவஎன்றடியவர் குழும
அவரருள் பெறஅருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பூமேவியநான் புரியும் செயல்கள்
பொன்றா பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறனும்
காேமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர்கோ கிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
ரஞ்சனி நந்தினி அங்கணி பத்ம
ராக விலாஸ வியாபினி அம்ப
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதாி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
வைலையொத்தவினை கலையொத் தமனம்
மருளப் பைறயாறொளியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுேமா
நிகளாம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவாற்றனுபூதி பெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எவர்எத் தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே
Written by: B.Rajinikanth, M. R. Vijaya

