Tekst Utworu

ஐயா ...நீ போன பாதை எங்க நிலம் பிரிஞ்ச தேகம் இங்க பிரிஞ்ச தேகம் இங்க
நீ படுத்த பாய் சுருட்டி நான் மூலையில வச்சிருக்க மூலையில வச்சிருக்க
வாய்க்கரிசி நான் போட வலதுகையை நான் வளர்த்தன் வலதுகையை நான் வளர்த்தன்
ஐயா உன் கழுத்தில் தொங்குதய்ய உன் கழுத்தில் தொங்குதய்யா
ஊர் அழுது போனதைய ஊர் அழுது போனதையா
வில்லுக்கு அர்ஜுனன் சொல்லுக்கு கர்ணன்
ஆனானப்பட்ட சீமையில மட்டுவில் பதிதனில வானமும் முட்டம் புகழுடைய
வாரியர் வழியில் வந்தார் எங்கள் ஐயா இரத்தினம்
இனி எழுதுக தீர்ப்பு என் பாட்டில் சொல்வரி இலக்கணம் தப்பாது
நான் வளர்ந்தது காடு வழி நடுவில் பார்த்தது அனைத்துமே வரலாறு huh
இது ஒரு கேள்வி இந்த கலையில் யார் நீ
கலைமகள் வாழி
கலகம் அடங்கும் மொழி கவிதை பிறந்த தொனி Oh No கலியுக சாமி
பாட்டா என்னைக் காப்பாய்
பலம் இழந்ததும் மீட்பாய் விதை போட்டாய் விளையாட்டாய்
இடம் பொருள் இனி ஏவல் களம்
அடி ஆழம் வரை அலைவரும்
பலியிடவா படைதரவா பயிலவன் மொழிநடையில் கணையிடவா சொல்லு
கலை கொண்ட மகனுக்கு கவிதைக்கு கைதட்டு வழிவிட்டு
வாரியார் சரவணமுத்து சின்னையா இரத்தினம் மின்னட்டும்
ஆதித்தன் இடுப்பில் இளவரசிகள் அனுதினம் குலுங்கட்டும்
யாழ்ப்பாணம் பிறப்பிடம் வன்னி கோலாலம்பூர் கால்தடம்
பலம் கொண்ட மனிதனின் பலவீனம் ஆயிரம் எழுதும் உரைநடையில் பதிக்கணும்
ஆதித்தன் வருகை ஆதித்தன் வருகை
Written by: Ratty Adhiththan
instagramSharePathic_arrow_out

Loading...