Créditos
PERFORMING ARTISTS
Hariharan
Lead Vocals
S. A. Rajkumar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arivumathi
Songwriter
S. A. Rajkumar
Composer
Letra
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை
நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ
அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனி தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான்
துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம்
அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
கீழ் இமை நான்
மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்து கொண்டேன் காதல் என்றே
நாம் பிறந்த நாளில் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை
நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ
அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
Written by: Arivumathi, S. A. Rajkumar

