Слова
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புணரா காதலே
புணரும் காதலே
அழலாய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே
உன் இதழை என் இதலும் போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேரமைதி கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும் கரைந்து விடும்
தீராமல் தூருதே (தூருதே)
காமத்தின் மேகங்கள் (காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி
புணரா காதலே
புணரும் காதலே
அழலாய் காதலே
அலறும் காதலே
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
கண்ணே கண்ணே கீச்சொலியே கீச்சொலியே
நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே
ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ளச்சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும்
பேசாத பாசையாய் (பேசாத பாசையாய்)
உன் தீண்டல் ஆகுதே (உன் தீண்டல் ஆகுதே)
தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி
Written by: Justin Prabakaran Noel, Justin Prabhakaran, Karthick Netha