Слова

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே
வாழ்வு உனக்காகவே ஹோ
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்னப் பருவம் இது
சிறு மீன் நீந்திப் போக சொல்லித் தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
பாதைகள் போட்டுத் தானா மேகங்கள் வானில் போகும்
விதிகளைத் தான் வகுத்த பின்பா தேனாக தென்றல் வீசும்
மலரும் மலர் வனத்திலே ஒரு சில செடிகள் பூத்தாலும்
பூத்திடும் மலர்களே பூக்கும்
பூத்த மலர் போல நீ வா
மலர்ந்து மணம் வீச வா
அருவி போலக் குருவி போல மனது மாறட்டுமே
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே
தூங்காதே தூங்கும் விழிகள் பார்க்காதே புதிய விடியல்
எண்ணம் போல் வாழ்வு இருக்கும்
எண்ணிப் பார் சக்தி பிறக்கும்
தாயின் மடி போலவே உனக்கொரு தந்தை தோள் உண்டு
வெற்றி வரும் உள்ளம் தளராதே
விழுகும் பூமாலையும் உன் தோளில் தன்னால் விழும்
வெற்றித் தோல்வி எல்லை அல்ல ஓடிக்கொண்டே இரு
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே
வாழ்வு உனக்காகவே ஹோ
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்னப் பருவம் இது
சிறு மீன் நீந்திப் போக சொல்லித் தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
Written by: Ilaiyaraaja, Palani Bharathi
instagramSharePathic_arrow_out

Loading...