Создатели
ИСПОЛНИТЕЛИ
Swarnalatha
Исполнитель
Srinivas
Исполнитель
Arjun Sarja
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Vairamuthu
Автор песен
Слова
உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்
உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்
வெக்கப்படப்பில் கவுளி கத்த
வலது பக்கம் கருடன் கொத்த
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காாி எதுக்க வர
பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில்
தெய்வம் புகுந்து வரம் தருமோ
உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில
விட்டுவிட்டுப் போகும் உயிரே
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில
விட்டுவிட்டுப் போகும் உயிரே
ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுகு தொலைச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறுபேச்சு
வெயிலடிக்கும் மறுபாா்வை
உடம்பு மண்ணில் புதையற வரையில்
உடன்வரக் கூடுமோ
உசிா் என்னோட இருக்கயில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவனே நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
மஞ்சதேச்சிக் குளிக்கையில்
என்னக்கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீா் கசிய
உதட்டு வழி உசிா் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான்
பின்னோடுதே அட காலம்
மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்சதேச்சிக் குளிக்கையில்
என்னக்கொஞ்சம்
பூசுவாயா
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்
மாத்துவாயா
Written by: Vairamuthu

