Lyrics
மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வரண்டு போன விழிகள் வாழுதே
காட்சி ஒன்றினை காட்ட தான்
சாட்சி சொல்லுமே பூட்டும் தான்
தேசமே
உயிர்த்து எழு
எண்ணும் மகிழ்மதி
களத்தின் அதிபதி
விளம்பாய்
விளம்பாய்
ஞானத்தின் ஞாலமே இக்கடே
இயம்புவாய்
நெஞ்சியம்புவாய்
குறை ஏறா மாட்சியோடு
கரையூராத மகிழ்மதி
பிறைவீழா ஆட்சியோடு
பறையிலா இம் மகிழ்மதி
தண்ணிற்று ஏற்ற துளிர்களின்
பரமே என போற்றுவாய்
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்
ஒருசை மதகம்
நீதி வீற்றிடும்
பாதகையே நீ வாழி
இருபுறமும் பாதமும்
பொன் மின்னும் அரியாசனமும்
உன் வாழியே
Written by: Karky, M.M. Keeravaani

