album cover
Neeye Neeye
183
Tamil
Neeye Neeye was released on July 10, 2024 by Dream Warrior Pictures as a part of the album Anjaamai (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJuly 10, 2024
LabelDream Warrior Pictures
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM162

Lyrics

[Verse 1]
நானே நானே நீ தானே
நீயே நீயே நான் தானே
நாளின்று தந்தை, நாளானதே...
அப்பா உனை வாழ்த்துவோம்
ஊர் போற்ற பிள்ளை
உருவாக்கினாய்
பூ தூவியே போற்றுவோம்
[Verse 2]
மூச்சும் நீயே
முழுதும் நீயே
தாயின் தாயே
என் தந்தையே...
தாயோடு தானே, நூறாண்டு காலம்
நீ வாழ வேண்டும் அப்பா...
தாயே கோயில்
தெய்வம் நீ அப்பா...
[Verse 3]
மகன் தோளினில்
மகள் மார்பினில்
இரு வானவில் ஆனோம்
குடை ராட்டினம் என தூக்கிட
வானோரம் போனோம்
பூ வாசம் யாவும்
உன் பாசம் பேசும்
நீ பார்க்கும் பார்வைக்கும்
தாய்ப்பாலின் வாசம்
[Verse 4]
வாடா என மகள் கூப்பிட
கணிவோடு எனை பார்ப்பாய்
No, no, என விரல் காட்டிட
பழம் தா என கேட்பாய்
திசை கண்டு வழி காட்டும்
குருநாதன் நீ தானே...
[Verse 5]
நீ வாங்கும் மூச்சே
என் சுவாசம் ஆச்சே
நீ இன்றி நானில்லையே...
யாதும் ஆகி நின்றாய்
நீ அப்பா...
[Verse 6]
மகளா இவள் மறு தாய் இவள் எனக் கூறிடுவாயே
தாயே எனை அடித்ததாலதன் ஒலி வாங்கிடுவாயே
நான் பேசும் நேரம், மறுவார்த்தை ம்ம் ஹம்ம்
என் ஆசை எதுவென்று உன் கண்கள் கூறும்
வாழ்வில் எனை கரையேற்றிட படிப்பே துணை என்றாய்
நாளும் அதை நிறைவேற்றிட உனையே தருகின்றாய்
உயிரால் எனை அடைகாத்திடும் உறவே அது நீதானே
[Verse 7]
முதல் நண்பன் நீயே
முதல் சேயும் நீயே
நீ இல்லா வாழ்வேது அப்பா
உயிர் அள்ளி ஊட்டும் உன்னோடு வாழ
ஓர் ஆயுள் போதாதப்பா!
யாதும் ஆகி நின்றாய், நீ அப்பா!
Written by: Arivumathi, Raghav Prasad
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...