Featured In

Credits

PERFORMING ARTISTS
Srinivas
Srinivas
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

ஹா...
ஆஅ...
மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது
நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்
போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால்
தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால்
பார்வையும் இல்லை
ஆலவிருட்சம் போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
காதல் தந்த நினைவுகளை
கழட்டி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
காதலின் கையில்
பூக்களும் உண்டு
காதலின் கையில்
கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து
நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து
நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது
நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
Written by: Deva, Vairamuthu
instagramSharePathic_arrow_out