制作
出演艺人
Santhosh Narayanan
表演者
Dr. S.C.Chandilya
表演者
作曲和作词
Santhosh Narayanan
作曲
Vivek
词曲作者
歌词
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா என்
அழுகையும் கேக்குதா அந்த
ரயிலின் அடியில் சிக்கி செதறி
இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா
இப்ப உடனே நான் உன்ன பாக்கணும்
மூக்கில் முகம் வச்சி ஒரசனும்
உன் நாக்கில் நக்கி என் அழுக்க
கழுவி போகணும் எங்க
வந்தா உன்ன பாக்கலாம்
யார் அந்த காட்டில்
ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல
நானா நானா இல்ல நீயா நீயா
நானா நானா நீயா கருப்பி
இறந்தது நீயா இருப்பது நானா
இருப்பது நீயா இறந்தது நானா
நம்மள கொன்னவன் யாருன்னு
எனக்கு நல்ல தெரியும்
அங்க செத்தது யாருன்னு
அவனுக்கு மட்டும் தான் புரியும்
அழிஞ்சது நீயா
அழுவது நானா
அழுவது நீயா
அழிஞ்சது நானா
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
எந்திரி கருப்பி
அம்மா கூப்புடுறா குளிக்க
போகணும் எந்திரிடி ஏன் டி
பேசல என் கூட என்னடி
நடந்திச்சி அங்க
வலிய தாங்காம துடிச்சியா
கடைசி நிமிஷம் என்ன நெனைச்சியா
உன்ன கொல்லும் போது
அவன் சிரிச்சானா
நீ கொரைக்கும் போது
அவன் மொறைச்சானா
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
உன் கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே
கேட்டியா யார் கூப்டு நீ போன
ஏன் டி போன
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
எல்லா மனுசனும் இங்கே ஒன்னு இல்லன்னு
வளத்து அணைக்குறவன்
கழுத்த நெரிக்கிறவன்
கண்ண தடவுறவன்
கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன்
நின்னு அழுகுறவன்
கருப்பன் செவப்பன்
சாமி சாத்தான் அடிமை
ஆண்டான் மயிரு மட்ட
ஆயிரம் மனுஷன் உண்டுன்னு
உனக்கு அப்போவே சொன்னேன்
கேட்டியா நீ
இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் கருப்பி
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு
நான் என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
ரெண்டு காலிலோ
நாலு காலிலோ
இந்த மண்ணிலே உலவிட்டு
கெடக்க நாய் இல்லடி நீ
நான் இல்லையா நீ
Written by: Santhosh Narayanan, Vivek