音乐视频

音乐视频

制作

出演艺人
Madhu Balakrishana
Madhu Balakrishana
表演者
Ilaiyaraaja
Ilaiyaraaja
表演者
Pooja
Pooja
演员
Arya
Arya
演员
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲

歌词

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாமொரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்!
ஒரு முறையா?
இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்!
புது வினையா பழ வினையா?
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற
வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்!
உன் திரு கரம் எனை அரவணைத்துனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
Written by: Ilaiyaraaja, Madhu Balakrishnan
instagramSharePathic_arrow_out

Loading...