制作
出演艺人
Radhan
表演者
Dhanush
表演者
Snehan
表演者
Ashok Selvan
演员
Abi Hassan
演员
作曲和作词
Radhan
作曲
Snehan
作词
歌词
யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ
தீர்வுகள் இன்றியே
பயணம் தான் நீளுமோ
தொடர்ந்திடும் துன்பத்தை
இதயம் தான் தாங்குமோ
எத்திசை எமக்கென
விடியல்தனை காட்டுமோ
எவ்வழி நம்பிக்கை
நம்மை வந்து சேருமோ
எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும் என படித்தோம்
யாவும் மெய்தானோ
யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட
யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு
முன்வினை என்பது பின்வினை தேடுமோ
ஒருவழி பாதையில் வாழ்க்கைதான் ஓடுமோ
காரணம் யாரென்று கடவுளை கேட்பதா
காலத்தை கேட்பதா யார் இங்கு பேசுவார்
ஆகாயம் போலத்தான் அடங்காத கேள்விகள்
விடைதேட தேடத்தான் விரிசல்கள் நூறு
பலநேரம் வாழ்க்கைக்கு பலியாகும் மானுடம்
பறிபோன யாவையும் கிடைக்காது மீண்டும்
நாளைகள் என்பது எதுவரையில் நீளுமோ
நம்பிக்கை கீற்றுகள் அதுவரையில் வாழுமோ
சிலந்தியின் கூடென சிந்தனைகள் யாவுமே
சிக்கல்களில் ஆடுதே சிதறித்தான் போகுதே
எழுதாத நாடகம் இயக்குவது யாரிங்கே
முடிவென்ன என்பதும் யார் சொல்வாரோ
தெரியாத பாதையில் புரியாத தேடல்கள்
எங்கெங்கோ போகுதே விடை இங்கு இல்லையே
எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும் என படித்தோம்
யாவும் மெய்தானோ
யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட
யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு
யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ
Written by: Radhan, Snehan

