歌词
நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
நான் என் தூறல் நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு தனிமையை நீக்கும் பாடல்கள்
உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும்
யாரேன்றே நீ அறியா இதயங்களில் மழையனாய்
நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய்
போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கனவுகளை உதிரியே
போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கனவுகளை உதிரியே
மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுகுதடி
நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி
இது நிலை இல்லை வெறும் மலை என்றோ
இது மலை இல்லை சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு
போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கனவுகளை உதிரியே
போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கனவுகளை உதிரியே
போ உறவே
Written by: A.H. Kaashif, Madhan Karky