制作
出演艺人
S. P. Balasubrahmanyam
声乐
T. Rajendran
表演者
Kalyan
声乐
作曲和作词
T. Rajendran
作曲
歌词
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்...
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ
கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்
மின்னும் விழியை மெல்ல வைரம் கண்டது
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு
பொன்னுருகும் கன்னம் குழிய
ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்
அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹா...
பாவை இதழது சிவப்பெனும் போது
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பாவை இதழது சிவப்பெனும் போது
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ
ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினை பருகியும் சென்றாளோ
Written by: T.Rajendran