歌詞
அஞ்சு வண்ண பூவே
தாலேலோ-லாலே
நட்சத்திர பூவே
காத்தா வாறன், காப்பா வாறன் ஏங்காத
வழி-வழி எல்லாம் வெடி-நெடி, வெடி-நெடி, படுகுழி-படுகுழி
தோட்டம் எங்க?
பூவும் எங்க?
வாசம் எங்க?
அஞ்சு வண்ண பூவே
காணோம் உன்ன
பிஞ்சு விரல் எங்க?, கொஞ்சும் குரல் எங்க?
அஞ்சுகமே கண்ணே
ஓ விடாம ஓடி, படாம ஆடி, நிலாவ மீறி, வினாவ சூடி
பராரி போல பித்தேறி வாடி
கொழாவி கூடி, தொலாவி தேடி
அநாதி பார்த்தன்
அஞ்சு வண்ண பூவே, அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும் ஒத்தக் குரல் போதும்
ஓ உள்ளிருந்து பேசும் ஒத்தக் குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே, அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும் ஒத்தக் குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே காணலையே உன்ன
காணலையே உன்ன, காணலையே உன்ன
நந்தவனமோ ஓர் மலரோ
தாய்மையின் குரலோ பேரருளோ உலகத்தில் இல்ல
வட்ட-வட்ட பாத சுத்துதே என் கால
எங்க இனி போவ?, எங்க இனி போவ?
அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு
அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு
பிஞ்சு விரல் தீண்ட நான் காத்திருப்பேன் பாரு
பிஞ்சு விரல் தீண்ட நான் காத்திருப்பேன் பாரு
அஞ்சு வண்ண பூவே, அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும் ஒத்தக் குரல் போதும்
ஓ உள்ளிருந்து பேசும் ஒத்தக் குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே
தாலேலோ-லாலீ
Written by: A. R. Rahman, Karthik Netha


