積分
演出藝人
Harini
主唱
Vairamuthu
演出者
Chorus
演出者
Deva
演出者
Vijay
演員
詞曲
Vairamuthu
詞曲創作
Deva
作曲
製作與工程團隊
A. M. Ratnam
製作人
歌詞
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
நிலவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
என் கரையை சலவை செய்து விடவா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு செய்து தர வா
காற்றை போல் எனக்கும் கூட சிறகொன்றும் கிடையாது
தரைமேலே செல்லும் போது சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிருத்தி வைப்பேன் ஹொய்
நன் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகு கொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பரந்து பரந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால் தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது
பூக்களில் தூங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்துக்கொள்வேன்
விடிகிறபோது விடிகிறபோது
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹொய்
நன் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
Written by: Deva, Vairamuthu