Kredity
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Saindhavi
Performer
Suriya
Actor
Aparna Balamurali
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Yugabharathi
Lyrics
Texty
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா
தூங்கி இருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ
உச்சி வெயில் வேளையில உந்த வரும் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா
அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நிலவ நெருங்க பொறந்தது காலம்
கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான்
பல்லக்குல ஏறி போக மறஞ்சது சோகம்
பல்லக்குல ஏறி போக மறஞ்சது சோகம்
தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி
Written by: G. V. Prakash Kumar, Yugabharathi

