Texty

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன அந்தி பகல் உருமாறுவதென்ன முத்துமணி சுடர் மோதுவதென்ன முன்னம் செய்த தவமோ என எண்ண கன்னக்குழி கதை நீளுவதென்ன கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன பால் முகம் பகல் இரவையும் மாற்றுவதென்ன பசுந்தளிரென ஆக்குவதென்ன கலங்கரை அவள் பார்வையே தேன் மழை தினம் தினம் எனை தீண்டுவதென்ன திசை மறந்திட தூண்டுவதென்ன கதிர் ஒளி அவள் வார்த்தையே பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு என் வாழ்வில் நான் அதை பார்த்திட பூத்தவள் என் மகளே கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு ஓடாமலே உறைவது என்ன காலங்களே மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே உன் கை விரலே ஒரு தூரிகையாய் தீட்டிடுதே என்னை ஓவியமாய் உன் இதழ்கள் பேசிடும் பேச்சை இமைக்குள் வைத்து தாங்கிடுவேன் இது போதும் இது போதும் என் மகளே பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன அந்தி பகல் உருமாறுவதென்ன முத்துமணி சுடர் மோதுவதென்ன முன்னம் செய்த தவமோ! என எண்ண கன்னக்குழி கதை நீளுவதென்ன கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன பெண்ணாலே! பூமியும் தோன்றியதென்று முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு என் வாழ்வில் நான் அதை பார்த்திட பூத்தவள் என் மகளே! கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு ஓடாமலே! உறைவது என்ன காலங்களே
Writer(s): Yugabharathi, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out