Kredity
PERFORMING ARTISTS
Veena : Haritha Raj
Other Instrument
Miruthangam & Percussions : Charu Hariharan
Other Instrument
COMPOSITION & LYRICS
Sriramakrishnan V
Songwriter
PRODUCTION & ENGINEERING
R Sanjay
Mastering Engineer
The Mystic's Room
Recording Engineer
Texty
அற்புதக் கடவுளாம் நற்பத கணபதியை
பொற்சபைப் புந்தியில் போற்றி வழிபட
எல்லா நன்மையும் எப்போதும் உண்டென
நல்லோர் மகிழ்வர் நானில மெங்குமே
குமரா வடிவழகா
உன் அருள் மழைதனை பொழிவாய்
திருத்தணிகையின் தலைவா
பிறவா வரம்தனை அருள்வாய்
முருகா மால் மருகா
என் துயர் நீங்கிட வருவாய்
வேலவா வடிவேலவா
எம் குருவாய் வந்தருள்வாய்
குமரா வடிவழகா
உன் அருள் மழைதனை பொழிவாய்
திருத்தணிகையின் தலைவா
பிறவா வரம்தனை அருள்வாய்
குருவே பரமன் மகனே
குகையில் வளரும் கனலே
குருவே பரமன் மகனே
குகையில் வளரும் கனலே
அறிவாகிய கோவிலிலே
அருளாகியதாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய் மயில்வாகனனே
அறிவாகிய கோவிலிலே
அருளாகியதாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய் மயில்வாகனனே
முருகா முருகா
முருகா மால் மருகா
என் துயர் நீங்கிட வருவாய்
வேலவா வடிவேலவா
எம் குருவாய் வந்தருள்வாய்
குமரா வடிவழகா
உன் அருள் மழைதனை பொழிவாய்
திருத்தணிகையின் தலைவா
பிறவா வரம்தனை அருள்வாய்
தமிழே! அழகின் உருவே
கனலே! ஞான வடிவே
தமிழே! அழகின் உருவே
கனலே! ஞான வடிவே
முடியா மறையின் முடிவே
அமராவதி வாழ் உறவே
பிணியாவையுமே களையும் கருணைக் கடலே
முடியா மறையின் முடிவே
அமராவதி வாழ் உறவே
பிணியாவையுமே களையும் கருணைக் கடலே
முருகா முருகா
முருகா மால் மருகா
என் துயர் நீங்கிட வருவாய்
வேலவா வடிவேலவா
எம் குருவாய் வந்தருள்வாய்
குமரா வடிவழகா
உன் அருள் மழைதனை பொழிவாய்
திருத்தணிகையின் தலைவா
பிறவா வரம்தனை அருள்வாய்
முருகா மால் மருகா
என் துயர் நீங்கிட வருவாய்
வேலவா வடிவேலவா
எம் குருவாய் வந்தருள்வாய்
குமரா வடிவழகா
குமரா வடிவழகா
Written by: Sriramakrishnan V