Songtexte

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நீ கேட்கையில் சொல்லவே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன் ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன் கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள் கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன் நீ என்னைக்கேட்டபோது காதலில்லை நான் காதல் உற்ற போது நீயுமில்லை ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன் இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம் உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே என் சாலை எங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம் என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை காட்சி யாவும் புதைந்து போனது என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன் ஓ ஓஒ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம் என்னோடு எட்டி நின்ற நாகரீகம் கண்ணில் கண்ணில் வந்து போகுதே என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே உன் தேடலோ காதல் தேடல் தான் என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நீ கேட்கையில் சொல்லவே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ramani Bharadwaj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out