Musikvideo

Bevorstehende Konzerte für A.R. Rahman, Vairamuthu, Hariharan & K.S. Chithra

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Vocals
K.S. Chithra
K.S. Chithra
Vocals
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Aravind Swamy
Aravind Swamy
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Lyrics

Songtexte

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
Writer(s): Madhan Karky Vairamuthu, Jessie Gift Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out