Songtexte

அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா தானா ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும் அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும், நீயும் நானும் இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள் உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு நெஞ்சோடு பாரம் கண்டால் தூரத்தில் தூக்கிப்போடு நெஞ்சோடு ஈரம் கண்டால் இன்னொரு பெண்ணைத்தேடு ஓ நான் போக பாதை ஏது வானில் மிதக்கலாம் வலி கூற வார்த்தை ஏது எல்லாம் மறக்கலாம் எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன் அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும், நீயும் நானும் ஓ... அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன் அவளின் நினைவால் எரிந்தேனே நானே ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும் புரிந்தால் மனதில் துயரில்லை தானே கல்வெட்டாய் வாழும் காதல் அழித்திட வேண்டும் நீயே காற்றாற்றில் நீச்சல் காதல் கைத்தர வந்தேன் நானே ஏற்காமல் போனாள் ஏனோ சோகம் எதற்குடா ஆறாத காயம் தானோ காலம் மறந்துடா உலகின் நடுவே தனியானேன் நானே அவளால் அழுதேன் கடலானேன் நானே அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா தானா ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்
Writer(s): Premgi Amaren, Lalitha Anandh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out