Musikvideo

#shorts #shreyaghoshal Elangaathu Veesudhe | Pithamagan | Shwetha KaruNanithi
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Vorgestellt in

Credits

PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Sriram Parthasarathy
Sriram Parthasarathy
Performer
COMPOSITION & LYRICS
Palani Bharathi
Palani Bharathi
Songwriter

Songtexte

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெறிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஓ மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரு எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெறிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
Writer(s): Bharathi Palani Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out