Songtexte

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா தொலை தூரம் நின்று நீ ஏன் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா இந்த சுகமான நாட்கள் இனி தினம் தோறும் வேண்டும் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன் வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா தொலை தூரம் நின்று நீ ஏன் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்
Writer(s): Harris Jayaraj, Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out