Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Sooraj Santhosh
Performer
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Composer
Na.Muthukumar
Songwriter
Στίχοι
யாரோ யாரோ
யாரிவளோ தேவதையோ
அழகால் என்னை கொள்ள வந்த ராட்சசியோ
ஏ வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு
ஒன்ன பாத்தேனே பாத்தேனே ஓ... ஓ... பாத்தேனே ஓ... ஓ...
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீனிருக்கும்
ஒன்னு சேர்ந்த கண்ணு
ரெண்ட பாத்தேனே பாத்தேனே ஓ... ஓ... பாத்தேனே ஏ...
மழைபோல மேகத்தில் இருந்து
தரையில தான் குதிச்சேனடி
மனசுக்குள்ள உன் பேர சொல்லி
பல முறை நான் ரசிச்சேனடி
கண்ணிருந்தா கனவிருக்கும்
நெஞ்சிறுந்தா நினைவிருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு
ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீனிருக்கும்
ஒன்னு சேர்ந்த கண்ணு
ரெண்ட பாத்தேனே பாத்தேனே பாத்தேனே ஏ...
ஏ பெண்ணே உன்னால
என் நெஞ்சம் தன்னால
தள்ளாடுதே திண்டாடுதே
காத்தாடி போல
ஹே கண்ணே உன்னால
என் கண்கள் தன்னால
துண்டாகுதே தூலாகுதே
கண்ணாடி போல
உன் கை பட்டு கலைகின்ற கூந்தல்
என் கவனத்தை கலைக்குதடி
உன் கை கோர்த்து போகின்ற பாதை
என் கண் முன்னே தெரியுதடி
பகல் இருந்தா இரவிருக்கும்
இரவிருந்தா பகல் இருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே
ஏ முள்ளே இல்லாம
ஒரு ரோஜா பாத்தேனே
கண்ணால தான் பாத்தி கட்டி
தோட்டம் போட்டேனே
ஏ சொல்லே இல்லாம
நான் ஊமை ஆனேனே
சொல்லாமலே பின்னால்
வந்து காதல் கொண்டேனே
என் நெஞ்சிக்குள் அறை ஒன்று அமைச்சு
உன் சிரிப்பெல்லாம் சேர்த்தேனடி
என் நிழலுக்கும் உன் பின்னால் நடக்க
நான் கட்டளைகள் விதிப்பேனடி
மூச்சிருந்தா பேச்சிருக்கும்
பேச்சிருந்தா மூச்சிருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஓ காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீனிருக்கும்
ஒன்னு சேர்ந்த கண்ணு
ரெண்ட பாத்தேனே பாத்தேனே பாத்தேனே ஏ...
யாரோ யாரோ
யாரிவளோ தேவதையோ
அழகால் என்னை கொள்ள வந்த ராட்சசியோ ஓ... ஓ...
Written by: Devi Sri Prasad, Na.Muthukumar
