Lyrics
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் காணம் பாடுவோம்
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துக்கொண்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் காணம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
Written by: A. M. Rajah, Kannadasan