Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Aalaap Raju
Aalaap Raju
Performer
Devan Ekambaram
Devan Ekambaram
Performer
Ranina Reddy
Ranina Reddy
Performer
Thamarai
Thamarai
Performer
Jeyam Ravi
Jeyam Ravi
Actor
Hansika Motwani
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Lyrics

Lyrics

ஏ, எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை, வெயிலென நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக
பல குரல்கள், பல-பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே-ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும்
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது, தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் (காதல்) விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல் (சாரல்) முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் (பாடல்) பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
அடம்பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே-பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்
எங்கேயும் காதல் (விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச)
வெண்காலை சாரல் (முகத்தினில் வந்து சட்டென்று மோத)
பொல்லாத பாடல் (பரவசம் தந்து பாதத்தில் ஓட)
முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை, வெயிலென நான்கு காலம் நீயே
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out

Loading...