Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sri Ram Parthasarathi
Performer
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Songwriter
Vidhyasagar
Composer
Lyrics
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா ரா

புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்தி
புதுகவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்தி
கிசுகிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்தி காதல் வந்ததே
இரு முயல் கொடுக்கின்ற முத்தம் நிறுத்தி
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்தி
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்தி காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே

கூவ சொல்லாதே குயிலை நிறுத்து
ஆட சொல்லாதே அலையை நிறுத்து
காய சொல்லாதே நிலைவை கொளுத்து
முட்டி விழுகின்ற அருவி நிறுத்து
சுற்றி வருகின்ற பூமி நிறுத்து
பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து
இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்
நட்சத்திர மண்டலத்தில் ஓரிடம் வேண்டும்
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்
கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ
கையசைவில் வானம் விழ பென்னசைவில் நானும் விழவே
காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா ரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா ரா
காதில் வேல் வீசும் கொலுசை நிறுத்து
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து
கண்கள் களவாடும் மின்னல் நிறுத்து
கதறி அழுகின்ற இடியை நிறுத்து
கத்தி எறிகின்ற மழையை நிறுத்து
அந்த இருவிழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்
இருவிழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்
அவளுக்கு நான் மட்டும் தெரிந்திட வேண்டும்
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்
சிந்தி விழும் முதல் மழை வந்து விழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல் வரை சுந்தரிக்கு சொந்தமாகவே
காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே
புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்தி
புதுகவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்தி
கிசுகிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்தி காதல் வந்ததே
இரு முயல் கொடுக்கின்ற முத்தம் நிறுத்தி
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்தி
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்தி காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா ரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா
திந்திந்தாரா திந்திந்தாரா திந்திந்தாரா ரா
Written by: Vairamuthu, Vidhyasagar, Vidya Sagar