album cover
Mainave Mainave(From "Thithikkudhe")
album cover
Mainave Mainave(From "Thithikkudhe") was released on January 1, 2006 by Star Music as a part of the album Hits of Sadhana Sargam
January 1, 2006
LabelStar Music
BPM95
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

தன, நன-நன-நன-நன-நா
தன, நன-நன-நன-நன-நா
தன, நன-நன-நன-நன, தானா, நானா
நன-நன, நானா, நன-நன, நானா
நானா-நானா, நா
நன-நன, நானா, நன-நன, நானா
நானா-நானா, நா
மைனாவே-மைனாவே
என் கனவில் தினம்-தினம் கேட்கும் பாடல் நீதானா?
ஹே, மைனாவே-மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா?
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா?
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா?
"பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம்-வாழ்வோம்", என்றாளா?
மைனாவே-மைனாவே
என் கனவில் தினம்-தினம் கேட்கும் பாடல் நீதானா?
மைனாவே-மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா?
நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை
இருளோடு உன்னை தேடி இளைத்துவிட்டேன்
திசைக்கொன்றாய் தேடிச் செல்ல விழி நான்கு இல்லை என்று
கண்ணீரை சிந்தி-சிந்தி கரைந்துவிட்டேன்
பிரிந்தோம் அன்று துளியாக, இணைந்தோம் இன்று நதியாக
நீரின் தாகம் நீரால் தீர்ந்தது
ஆ-ஆ-ஆ, மைனாவே-மைனாவே
என் கனவில் தினம்-தினம் கேட்கும் பாடல் நீதானா?
மைனாவே-மைனாவே
என் கனவில் தினம்-தினம் கேட்கும் பாடல் நீதானா?
சில்லென்ற முத்தம் ஒன்று, செல் எல்லாம் நனையும் போது
உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே
தேரோடு பூவனம் ஒன்று, வாரோடு சரியும் போது
அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே
தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக?
ம்ம், முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் (ஆ-ஆ-ஆ, ஆ)
மைனாவே-மைனாவே
என் கனவில் தினம்-தினம் கேட்கும் பாடல் நீதானா?
ஆ, மைனாவே-மைனாவே
என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா?
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா?
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா?
"பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம்-வாழ்வோம்", என்றாளா?
Written by: Vidhyasagar, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...